பொங்கல் வைக்க சிறந்த நேரம், காலம் பற்றிய முழுமையான தகவல்கள்..!

Pongal 2023: பொங்கல் பண்டிகை அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 'பொங்கல்' என்றால் 'பொங்கி வழிதல் பொங்குதல்' என்று பொருள்.

தைப் பொங்கல் 2023-ல் கொண்டாடப்படும் நாட்கள் 1. ஜனவரி 14ஆம் தேதி போகிப் பொங்கல் 2. ஜனவரி 15ஆம் தேதி சூரிய பொங்கல் 3. ஜனவரி 16ஆம் மாட்டுப் பொங்கல் 4. ஜனவரி 17ஆம் காணும் பொங்கல்

தைப் பொங்கலன்று பொங்கல் வைக்க சிறந்த ஜனவரி 15-ஆம் தேதி அதாவது தை மாத 01ஆம் தேதி நல்ல நேரம் : காலை 07.30 முதல் 08.30 வரை பகல் 1.30 முதல் 02.30 வரையிலும் மாலை 03.30 முதல் 04.30 வரையிலும் பொங்கல் வைக்கலாம்.

ஜனவரி 16-ஆம் தேதி அதாவது தை 02ஆம் தேதி மாட்டுப் பொங்கலன்று பொங்கல் வைக்க சிறந்த நல்ல நேரம் காலை 06.30 முதல் 07.30 வரை, மாலை 04.30 முதல் 05.30 வரை